Reading Time: < 1 minute

கனடாவின் கியூபிக் மாகாணத்தில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் அன்றில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

Tamil Business Directory

இரண்டு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

Saguenay-Lac-St-Jean பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அதிவேக நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்த வாகனம் ஒன்று இன்னும் ஒரு வாகனத்தை முந்தி செல்ல முயற்சித்த போது இந்த விபத்து இடம் பெற்றிருக்கலாம் என போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் 28 வயதான ஆண் ஒருவரும், 26 வயதான பெண் ஒருவரும், 73 வயதான ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

ட்ரக் வண்டி ஒன்றும் கார் ஒன்றும் மோதிக் கண்டதில் இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.

என்ன காரணத்தினால் இந்த விபத்து இடம் பெற்றது என்பது குறித்து விசாரணைகளின் பின்னர் தீர்க்கமாக அறிவிக்க முடியும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விபரங்களை போலீசார் வெளியிடவில்லை.