Reading Time: < 1 minute

பெண் ஒருவரைத் தாக்கி, குழந்தையை தடுத்து வைத்திருந்த நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

Tamil Business Directory

ஸ்காப்ரோவின் மிட்லான்ட் அவன்யூ மற்றும் கிங்ஸ்டன் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

றொரன்டோ பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடாத்தியமை குறித்து விசேட விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பெண் ஒருவர் தாக்கப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்திருந்தனர்.

42 வயதான நபர் ஒருவர் பெண்ணை கொடூரமாக தாக்கி, குழந்தை ஒன்றை தூக்கிக் கொண்டு வீட்டினுள் சென்றுள்ளார்.

குழந்தையடன் சந்தேக நபர் வீட்டினுள் இருப்பதை பொலிஸார் உறுதி செய்து கொண்டனர்.

குழந்தையை மீட்பதற்கு எடுக்கப்பட்ட முயற்சியின் போது சந்தேக நபருடன் ஏற்பட்ட மோதலில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறித்த நபர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்படைய நபருக்கும், தாக்கப்பட்ட பெண் மற்றும் குழந்தைக்கும் இடையிலான உறவு பற்றிய விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.