Reading Time: < 1 minute

றொரன்டோவில் மரண சடங்கு ஒன்றில் பங்கேற்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

Tamil Business Directory

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

றொரன்டோவின் ரிச்மன்ட்ஹில் மயானத்தில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரிச்மன்ட்ன் ஹில் பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம் மையவாடியில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

26 மற்றும் 27 வயதான இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளனர்.

துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மூன்று அல்லது நான்கு பேரைக் கொண்ட கும்பலொன்று இந்த நபர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மரண சடங்குகள் பூர்த்தியாகி மயானத்தை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூடு நடாத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை, விசாரணைகள் முழு வீச்சில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.