Reading Time: < 1 minute

நோவா ஸ்கோடியாவில் பயணங்களுக்கான டிரெய்லர் தீப்பற்றி எரிந்து 6 பேர் கொண்ட குடும்பம் பலியான சம்பவத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tamil Business Directory

நோவா ஸ்கோடியாவின் Amherst பகுதியில் அமைந்துள்ள இறுதிச்சடங்குகள் முன்னெடுக்கும் இல்லம் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், குறித்த குடும்பத்தினருக்கு இறுதிச்சடங்குகளுக்கான தயாரிப்புகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

செப்டம்பர் 12ம் திகதி நோவா ஸ்கோடியாவின் Millvale பகுதியில் விடுமுறையை கழிக்க 6 பேர்கள் கொண்ட Robert Jorge குடும்பம் சென்றுள்ளது. இந்த நிலையில் அவர்கள் பயன்படுத்திய பயணத்திற்கான டிரெய்லர் தீ விபத்தில் சிக்க, அதில் Robert Jorge குடும்பம் பரிதாபமாக பலியாகியுள்ளது.

இதில் Robert Jorge உடன் அவரது மனைவி Michelle Elaine Robertson(28) மற்றும் இவர்களது நான்கு பிள்ளைகள் பரிதாபமாக பலியானார்கள்.