Reading Time: < 1 minute

நேற்று இரவு ஸ்காபரோவில் இரண்டு வாகனங்கள் மோதிக்கொணட விபத்தில் படுகாயமடைந்த ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

கார் ஒன்றும் உந்துருளி ஒன்றும் மோதிக்கொண்ட இந்த விபத்து மார்க்கம் வீதி மற்றும் ஃபின்ச் அவனியூ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆண் ஆபத்தான நிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதனை அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

அதேபோல குறித்த அந்தப் பெண்ணும் பலத்த காயங்களுடனேயே மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தினை அடுத்து குறித்த அந்தப் பகுதி ஊடான போக்குவரத்துகளைத் தடை செய்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.