Reading Time: < 1 minute
Tamil Business Directory
நெடுஞ்சாலை 427இல் திங்கட்கிழமை காலை வேளையில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த உந்துருளி ஓட்டுனர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Derry வீதிக்குத் தெற்கே, நெடுஞ்சாலை 427இன் வடக்கு நோக்கிய வழித்தடத்தில் நேற்று காலை ஆறு மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. அந்த வழியே சென்றுகொண்டிருந்த சரக்கு ஊர்தி ஒன்றின் மீது, பின்னால் வந்த உந்துருளி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்தில் படுகாயமடைந்த உந்துருளி ஓட்டுனர் பலத்த காயங்களுடன் உயிராபத்தான நிலையில் மருத்துமவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நெடுஞ்சாலையின் வடக்கு நோக்கிய வழித்தடத்தில், விபத்து இடம்பெற்ற பகுதி ஊடான போக்குவரத்துகளைத் தடை செய்த காவல்துறையின்ர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.




