Reading Time: < 1 minute

மிசிசாகாவில் உள்ள வீடு ஒன்றில் கடந்த ஆண்டு 83 வயது மூதாட்டி ஒருவர் கொல்லப்ப்டட சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 21ஆம் திகதி காலை வேளையில், Cawthra வீதி மற்றும் Silver Creek Boulevard பகுதி வீடொன்றில் பெண் ஒருவர் அசைவற்றுக் கிடப்பதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து அதிகாரிகள் அங்கு விரைந்த போது, அங்கே மேரி அரோயோ எனப்படும் அந்த 83 வயது மூதாட்டி தாக்குதலுக்குள்ளான நிலையில் அசைவற்றுக் கிடந்ததாகவும், அவர் உயிரிழந்து விட்டமை பின்னர் உறுதிப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான நிலையில் நீண்ட நாட்களாக இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த காவல்துறையினர், இந்தக் கொலை தொடர்பில் மிசிசாகாவைச் சேர்ந்த 47 வயது ஆலெக்ஸசான்டர் பேட்ஸ் என்பரைக் கைது செய்துள்ளதாக நேற்று திங்கட்கிழமை தகவல் வெளியிட்டுள்ளனர்.

தற்போது காவல்துறையினரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள அவர் மீது முதல்தர கொலைக் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும் கொலையுண்டவரும் தற்போது கைது செய்யப்பட்ட நபரும் ஏற்கனவே ஒருவரை ஒருவர் அறிந்தவர்களா என்ற விபரம் எதனையும் விசாரணை அதிகாரிகள் வெளியிடவில்லை.

இதேவேளை இந்த விசாரணைக்கு உதவும் வகையிலான ஒளிப்பதிவு உள்ளிட்ட ஆதாரங்களை வைத்திருப்போர், அல்லது மேலதிக தகவல் அறிந்தோர் தம்மைத் தொடர்பு கொள்ளுமாறு பீல் பிராந்திய காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.