Reading Time: < 1 minute

கனடாவின் மனிரோபா (Manitoba) மாநிலத்தில் பெலேர், மேன் (Bélair, Man) பகுதியில் உள்ள வின்னிபெக் ஏரியில் (Lake Winnipeg) படகு கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு மற்றொருவரைக் காணவில்லை.

Tamil Business Directory

ஏரியின் தெற்குப் பரப்பின் கிழக்குக் கரையில் உள்ள பகுதியில் இந்த படகு விபத்து நேற்று (சனிக்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளது.

இதையடுத்து, அப்பகுதியில் உள்ளவர்களால் தகவல் வழங்கப்பட்டதையடுத்து கனேடிய இராணுவம், கனேடிய கடலோர காவல்படை, பொலிஸார் (RCMP), தீயணைப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ குழுவினர் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் பங்கேற்றனர்.

இந்நிலையில் ஏரியிலிருந்து விபத்துக்குள்ளான படகு கண்டுபிடிக்கப்பட்டு கரைக்குக் கொண்டுவரப்பட்டதுடன், ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மற்றுமொருவரைக் காணவில்லை என்று தெரிவிக்கப்படுவதுடன் அவரைத் தேடும் பணி இடம்பெறுகிறது.