Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை ஒரு இலட்சத்தை நெருங்கிவருகின்றது. எனினும் கடந்த வாரங்களை விட தற்போது பாதிப்பு குறைந்துவருகிறது.

Tamil Business Directory

அந்நாட்டில், கடந்த 24 மணித்தியாலங்களில் 467 பேருக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் நேற்று மட்டும் 58 பேர் மரணித்துள்ளனர்.

மேலும், கனடாவில் மொத்தமாக 98ஆயிரத்து 410 பேருக்கு இதுவரை தொற்று இனங்காணப்பட்டுள்ளதுடன் மொத்த மரணங்கள் 8 ஆயிரத்து 107 ஆகப் பதிவாகியுள்ளது.

இதனைவிட, இதுவரை 59 ஆயிரத்து 354 பேர் குணமடைந்துள்ள நிலையில் 30 ஆயிரத்து 949 பேர் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, கனடாவில் இதுவரை, 21 இலட்சத்து 13 ஆயிரத்து 924 பேருக்கு வைரஸ் தொற்று குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கனடா மாநிங்களில் கியூபெக் மாநிலமே அதிக பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில் அங்கு இதுவரை 53 ஆயிரத்து 824 பேர் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், ஒன்ராறியோ மாநிலம் பாதிப்பில் அடுத்த இடத்தில் உள்ளதுடன் அங்கு இதுவரை 31 ஆயிரத்து 992 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, அல்பேர்டாவில் 7ஆயிரத்து 383 பேரும் பிரிட்டிஸ் கொலம்பியாவில் 2 ஆயிரத்து 709 பேரும் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை பதிவாகியுள்ளது.