டொராண்டோவின் நோர்த் யோர்க் பகுதியில் உள்ள RioCan Empress Walk Plaza வணிக வளாகத்தில் நகரும் படிக்கட்டில் இருந்து விழுந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
Toronto Police தகவலின்படி, ஜூன் 25, 2026 வியாழக்கிழமை மாலை 5 மணிக்குப் பிறகு, Yonge Street மற்றும் Empress Avenue அருகே அமைந்துள்ள RioCan Empress Walk Plaza-வுக்கு அவசர உதவிப் பிரிவினர் அழைக்கப்பட்டனர்.
அங்கு ஒருவர் நகரும் படிக்கட்டில் இருந்து விழுந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு விரைந்த அவசர உதவிப் பிரிவினர், குறித்த நபர் உயிரிழந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர்.
சம்பவத்தையடுத்து, வணிக வளாகத்தில் இருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு, plaza தற்காலிகமாக மூடப்பட்டது.
இந்தச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைக்காக Ontario Ministry of Labour-க்கு தகவல் வழங்கப்பட்டுள்ளதாக Toronto Police தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபர் தொடர்பான கூடுதல் விவரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. சம்பவம் குறித்த மேலதிக தகவல்கள் அதிகாரிகளின் விசாரணைக்குப் பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.