Reading Time: < 1 minute

வன்கூவர் தீவில் போர்ட் ஆல்பெர்னி மற்றும் பாம்ஃபீல்ட் பகுதிக்கு இடையே இடம்பெற்ற பேருந்து விபத்தில் மாணவர்கள் இருவர் உயிரிழந்துள்ளதோடு மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.

Tamil Business Directory

நேற்று முன்தினம் இரவு பிரான்சிஸ் ஏரிக்கு மேற்கே சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள கர்மனா சந்திக்கு அருகில் உள்ள வீதி வளைவு ஒன்றில் மோதி இரு தடவைகள் தடம்புரண்ட பேருந்து அருகிலுள்ள பள்ளத்தில் வீழ்ந்துள்ளது.

ஆல்பெர்னியில் இருந்து  பேருந்தில் பாம்ஃபீல்ட் கடல் அறிவியல் மையத்திற்கு செல்லும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் விக்டோரியா பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயரிழந்ததாகவும் மேலும் மூன்று பேர் படுகாயமடைந்த நிலையில் நேற்று (சனிக்கிழமை) காலை மீட்கப்பட்டதாக றோயல் கனடிய விமானப்படை தெரிவித்துள்ளது.

காயமடைந்தவர்கள் விக்டோரியாவில் உள்ள மருத்துவமனைக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாக விமானப்படையின் அதிகாரி கூறினார். இந்த விபத்து தொடர்பாக விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.