Reading Time: < 1 minute

கடந்த வியாழக்கிழமை கிங்ஸ்டன் பகுதியில் இடம்பெற்ற சம்பவம் ஒன்றில் காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் பலியான 22 வயது இளைஞரின் அடையாளம் வெளியிடப்பட்டுள்ளது.

Tamil Business Directory

காவல்துறை அதிகாரி ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் உயிரிழந்தவர் ஈவன் ஃபிறீமன் எனவும், அவரது குடும்பத்தினரின் அனுமதியுடன் அடையாளம் வெளியிடப்படுவதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட ஒன்ராறியோ மாகாண சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற குறித்த இந்தச் சம்பவத்தில் காவல்துறையின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான அவர், பின்னர் கத்தியால் தன்னைத்தானே தாக்கக்கொண்டிருந்த வேளையில், பிறிதொரு காவல்துறை அதிகாரி மின் அதிர்ச்சி ஆயுதத்தை அவர் மீது பிரயோகித்த வேளையில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

இவ்வாறான நிலையில் உயிரிழந்த அந்த நபரின் சடலம் மீதான உடற்கூற்றுப் பரிசோனதனை நேற்று வெள்ளிக்கிழமை மேற்கொள்ளப்பட்டுள்ளது.