Reading Time: < 1 minute

நோர்த் யோர்க்கில் உள்ள உணவுக்கூடப் பகுதி ஒன்றில் இடம்பெற்ற கத்திக் குத்துச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஆண் ஒருவர் பாரதூரமான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

Four Winds Drive மற்றும் Sentinel பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ இடத்தில் குறித்த அந்த ஆண் பல தடவைகள் குத்தப்பட்ட நிலையில் காணப்பட்டதாகவும், எனினும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும் போது அவர் சுயநினைவுடன் காணப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அவர் சிகிச்சைக்காக தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதனை ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினரும் உறுதிப்படுத்தியுள்ளனர்.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாக எவரும் கைது செய்யப்படாத நிலையில், சந்தேக நபர் குறித்த விபரங்கள் எதனையும் வெளியிடாத காவல்துறையினர், மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.