Reading Time: < 1 minute

தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, பிரதமர் ஜஸ்டின் ரூடோ மொன்றியலில் தனது தேர்தல் தொகுதியில் உள்ள தொடரூந்து நிலையத்தில் இன்று காலை வேளையிலேயே காத்திருந்து, அந்த நிலையம் ஊடாக பயணிக்கும் மக்களிடம் நன்றி தெரிவித்துள்ளார்.

Tamil Business Directory

அங்கு வந்த மக்களுக்கு கைலாகு கொடுத்து அவர்களிடம் நன்றி தெரிவித்த வேளையில், மக்களில் பலரும் அவர் வெற்றி பெற்றமைக்கு வாழ்த்து தெரிவித்து, அவருடன் நின்று படம் எடுத்துக் கொண்டனர்.

கடந்த 2015ஆம் ஆண்டு தேர்தல் வெற்றியினை அடுத்தும், மக்கள் எதிர்பார்க்காத வேளையில் இவ்வாறு அவர்கள் முன் தோன்றி, அவர்களிடம் நன்றி தெரிவிக்கும் செயற்பாட்டை ஜஸ்டின் ரூடோ மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.