Reading Time: < 1 minute

கனடாவின் கியூபெக் மாகாணத்தில் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

வுட்பீன் கடற்கரை பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றிருந்தது.

இந்த சம்பவத்தில் 21 வயதான டசிக்கா மதோ என்பவர் உயிரிழந்திருந்தார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக ரொறன்ரோ மற்றும் டர்ஹம் பிராந்தியங்களில் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

18 வயதான ரிக்கார்டோ வில்லீஸ், 19 வயதான லுக்கீரா 26 வயதான கெனத் நீல் ஆகியோர் இந்த கொள்ளை சம்பவத்துடன் தொடர்பு பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சந்தேக நபர்களுக்கு எதிராக கொலை மற்றும் கொள்ளை குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வழக்கு தொடரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.