Reading Time: < 1 minute

கனடாவில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஒருவர் காயமடைந்துள்ளார்.

Tamil Business Directory

யோர்க் பிராந்தியத்தின் விட்சேர்ச்-ஸ்டோப்வில்லி பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இரண்டு வாகனங்கள் மோதிக் கொண்டதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் தகவல்கள் ஏதேனும் இருந்தால் அதனை வழங்குமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

விபத்தில் உயிரிழந்தவர்கள் பற்றிய விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக யோர்க் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

டொயொட்டா கொரோலா ரக வாகனத்தில் பயணம் செய்த இருவரும் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதுடன் மேர்சிடிஸ் ரக வாகனத்தில் வந்த சாரதி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.