Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந்தொற்றினால், கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும், வைரஸ் தொற்றினால் இரண்டாயிரத்து 330பேர் பாதிக்கப்பட்டதோடு, 43பேர் உயிரிழந்துள்ளனர்.

Tamil Business Directory

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 31ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை இரண்டு இலட்சத்து 36ஆயிரத்து 841பேர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், மொத்தமாக பத்து ஆயிரத்து 179பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், 28ஆயிரத்து 933பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அத்துடன் இதுவரை ஒரு இலட்சத்து 97ஆயிரத்து 729பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதில் 218பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.