Reading Time: < 1 minute

கனடாவில் குளித்துக்கொண்டிருந்த நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

அறிமுகமில்லாத ஒருவரின் வீட்டின் குளியலறையை பயன்படுத்தி குளித்தார் என சந்தேக நபர் மீது பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தனது நண்பரின் வீடு என கருதி குறித்த நபர் குளித்துள்ளார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்தின் போது எந்தவொரு பொருளும் களவாடப்படவோ அல்லது யாருக்கும் காயங்களோ ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

வீட்டின் கதவுகளை உரிய முறையில் மூடி வைக்குமாறு பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.