Reading Time: < 1 minute

ரொரன்ரோ டவுன்ரவுன் பகுதியில் வாகனம் மோதியதில் படுகாயமடைந்த பெண் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Tamil Business Directory

Bay Street மற்றும் College Street பகுதியில் நேற்று முன்தினம் மாலை 5:45 அளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த அந்தப் பெண் தடப்பேரூந்திலிருந்து வெளியேறும் போது அல்லது உள்நுளைய முயற்சித்த வேளையில் அந்த வழியே வந்த வாகனம் ஒன்றினால் மோதுண்டதாக ரொரன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சுமார் 40 வயது மதிக்கத்தக்க அந்தப் பெண் பாரதூரமான காயங்களுடன் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதனை ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

விபத்துடன் தொடர்புடைய வாகனத்திச் சாரதி சம்பவ இடத்திலேயே தரித்திருந்த நிலையில், குறித்த அந்தப் பகுதி ஊடான போக்குவரத்துகளைத் தடை செய்த அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.