Reading Time: < 1 minute

2018ஆம் ஆண்டில் ஓபியாய்டுகளின் விளைவாக கனடாவில் ஒரு நாளைக்கு சுமார் 13பேர் உயிரிழந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.

Tamil Business Directory

போக்குவரத்து தொடர்பான காயங்களை விட ஓபியாய்ட் தொடர்பான இறப்புகள் இரு மடங்கு அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கனடாவின் பொது சுகாதார நிறுவனத்தின் தரவுகளின் அடிப்படையில், ஓபியாய்டுகளின் விளைவாக 2018ஆம் ஆண்டில் கனடாவில் 4,614பேர் உயிரிழந்துள்ளனர்.

கனேடிய தொண்டு நிறுவனமான பாராசூட் உள்ளிட்ட ஐந்து நிறுவனங்கள் மேற்கொண்ட ஆய்வில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பாராசூட்டின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அறிக்கை இணை எழுத்தாளர் பமீலா புசெல்லி கூறுகையில், ‘இவற்றில் பெரும்பாலானவை தடுக்கக்கூடியவை என்பதை நாங்கள் அறிவோம்’ என கூறினார்.