ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகருக்குச் சுற்றுலா சென்றிருந்த டொராண்டோவைச் சேர்ந்த மூன்று பொலிஸ் அதிகாரிகள் மீது தீவிரக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, அங்கு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக டொராண்டோ பொலிஸ் சேவை தெரிவித்துள்ளது.
பணி நிமித்தமாக இல்லாமல், தங்களது சொந்த விடுமுறையைக் கழிப்பதற்காக அவர்கள் ஸ்பெயின் சென்றிருந்ததாக பொலிஸ் தரப்பு விளக்கியுள்ளது.
இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் மிகவும் தீவிரமானவை என்பதால், டொராண்டோ பொலிஸ் தலைமை அதிகாரி உடனடியாக நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் கனடா திரும்பிய ஒரு அதிகாரி, சமூகப் பாதுகாப்பு மற்றும் காவல் சட்டத்தின் (CSPA) கீழ் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
எஞ்சிய இரண்டு அதிகாரிகளும் இன்னும் சில தினங்களில் கனடா திரும்பியவுடன் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுவார்கள் என்று டொராண்டோ பொலிஸ் செய்தித் தொடர்பாளர் மின்னஞ்சல் வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளார்.
அதிகாரிகள் அங்கு கைது செய்யப்படுவதற்கு வழிவகுத்த அந்தச் சம்பவம் என்ன என்பது குறித்தோ, அல்லது அவர்கள் மீது என்னென்ன பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்தோ டொராண்டோ பொலிஸார் எந்த விவரங்களையும் தற்போது வெளியிடவில்லை.





Comments are closed, but trackbacks and pingbacks are open.