Reading Time: < 1 minute

கனடாவில் அங்கீகரிக்கப்பட்ட ‘டேவ்னியோஸ்’ என்ற மருந்தின் முக்கிய மருத்துவப் பரிசோதனைத் தரவுகளில் நம்பகத்தன்மை குறித்த கடுமையான சந்தேகங்கள் எழுந்துள்ளன.

Tamil Business Directory

இதனைத் தொடர்ந்து, இந்த மருந்து குறித்த ஆதாரங்களை கனடா சுகாதாரத்துறை அவசர மறுபரிசீலனைக்கு உட்படுத்தியுள்ளது.

மருத்துவர்கள் புதிய நோயாளிகள் எவருக்கும் ‘டேவ்னியோஸ்’ மருந்தை வழங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

இந்த மருந்தின் நன்மைகள் அதன் பக்கவிளைவு அபாயங்களை விட அதிகமாக இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருவதால் இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக செவ்வாய்க்கிழமை அன்று கனடா சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள ஆபத்து எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கடுமையான ‘ஏன்கா வாஸ்குலிடிஸ்’ நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களுக்காக இந்த ‘டேவ்னியோஸ்’ மருந்து கனடாவில் அங்கீகரிக்கப்பட்டது.

இந்த அங்கீகாரத்திற்கு அடிப்படையாக அமைந்தது அதன் மூன்றாம் கட்ட ‘அட்வகேட்’ மருத்துவப் பரிசோதனைத் தரவுகளாகும்.

இது உடலின் இரத்த நாளங்களில் கடுமையான வீக்கத்தை ஏற்படுத்தும் ஒரு அரிய வகை நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு ஆகும். இதில் ‘கிரானுலோமடோசிஸ் வித் பாலிஆஞ்சியிடிஸ்’ மற்றும் ‘மைக்ரோஸ்கோபிக் பாலிஆஞ்சியிடிஸ்’ ஆகிய நோய்களும் அடங்கும்.

புதிய நோயாளிகளுக்கு இந்த மருந்த சிகிச்சையைத் தொடங்க வேண்டாம். ஏற்கனவே இந்த மருந்தை உட்கொண்டு வரும் நோயாளிகளைத் தொடர்புகொண்டு, அவர்களின் உடல்நிலையைக் கண்காணிப்பதோடு, அவர்களுக்கு இந்த மருந்து தொடர்ந்து தேவையா இல்லையா என்பதை முடிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.