Reading Time: < 1 minute

சனிக்கிழமை காலை வேளையில் ஈட்டோபிக்கோ குடியிருப்பு பகுதி வீடொன்றில் இடம்பெற்ற விருந்துபசார நிகழ்வில் அதிக சத்தம் எழுப்பப்படுவதாக கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், அங்கிருந்து குறைந்தது இரண்டு துப்பாக்கிகளைக் கைப்பற்றியதுடன் சிலரைக் கைது செய்துள்ளனர்.

Tamil Business Directory

Burnhamthorpe வீதிக்கு அருகே, Meadowbank வீதியில் அமைந்துள்ள குறித்த அந்த வீட்டிலிருந்து அதிக சத்தம் வருவதாக அருகே குடியிருக்கும் பலரிடம் இருந்து காவல்துறையினருக்கு முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அந்த வீட்டில் வெள்ளிக்கிழமை இரவில் இருந்து களியாட்ட விருந்து இடம்பெற்று வந்ததாகவும், அங்கு சென்ற அதிகாரிகள் குறைந்தது இரண்டு துப்பாக்கிகளை அந்த வீட்டில் வைத்து கைப்பற்றியதாகவும், சிலர் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்ற போதிலும், எத்தனை பேர் கைது செய்யப்பட்டனர் என்ற தெளிவான தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை.

இந்தச் சம்பவத்தின் போது எவரும் காயமடையவில்லை எனவும், விசாரணைகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.