Reading Time: < 1 minute

கடந்த ஜூன் 14 அன்று காலை நோர்த் யோர்க் பகுதியில் உள்ள கீல் ஸ்ட்ரீட் மற்றும் வில்சன் அவென்யூ பகுதியில் ஒரு குழுவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதில் டொராண்டோவைச் சேர்ந்த எரிக் சாபர் (32) என்பவர் தாக்கப்பட்டதோடு, அவர் மீது வாகனம் ஒன்றும் மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Tamil Business Directory

இந்த கொலை வழக்கு தொடர்பாக ஏற்கனவே மிலன் ஆண்ட்ராஸ் பாபோஸ் (18), ரிச்சர்ட் ஓலா (23) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றம் (second-degree murder) சுமத்தப்பட்டுள்ளது.

இதே வழக்கில் தேடப்பட்டு வந்த 25 வயதான ஜெனிஃபர் ஓலா (Dzsenifer Olah) என்ற பெண், கடந்த வார இறுதியில் காவல்துறையிடம் சரணடைந்தார். அவரும் கைது செய்யப்பட்டு, அவர் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த விசாரணைக்கு உதவிய பொதுமக்களுக்கு காவல்துறையினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.