Reading Time: < 1 minute

இன்று காலை டொன் வெலி பார்க்வே பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உந்துருளி ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ரொரன்ரோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

SUV ரக வாகனமும் உந்துருளி ஒன்றும் தொடர்புபட்ட இந்த விபத்து Lawrence Avenue East மற்றும் Underhill Drive பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை 12:30 அளவில் சம்பவித்துள்ளது.

குறித்த இந்த விபத்து தொடர்பிலான தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போது அங்கே விபத்துக்குள்ளான உந்துருளியின் ஓட்டுனர் உந்துருளியில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் காணப்பட்டதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

உந்துருளியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டமை சற்று நேரத்தில் உறுதிப்படுத்தப்பட்டதாகவும், விபத்துடன் தொர்புடைய மற்றைய வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே தரித்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தினை அடுத்து காலை ஐந்து மணி வரையிலும் அந்தப் பகுதி ஊடான போக்குவரத்துகள் தடை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த நபர் தொடர்பிலான விபரங்கள் எவையும் உடனடியாக வெளியிடப்படாத நிலையில், விசாரணைகள் தொடர்கின்றன.