Reading Time: < 1 minute

கனடாவில் மாயமான சிறுமியும் சிறுவனும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

Tamil Business Directory

குறித்த இருவரையும் அவர்களின் தந்தையே கடத்தியதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சுங் லீ (13) என்ற சிறுவனும் ஜுங் லீ (15) என்ற அவனது சகோதரியும் கடந்த 6ஆம் திகதி காணாமல் போயிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து Amber Alert எனப்படும் சிறுவர்கள் கடத்தப்பட்டால் விடப்படும் எச்சரிக்கையையும் பொலிஸார் விடுத்திருந்தனர்.

இந்நிலையில் சுங் லீ மற்றும் ஜுங் லீ ஆகிய இருவரும் பொலிஸாரால் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

குறித்த இருவரையும் அவர்களின் தந்தை சுல் லீ கடத்தியதாக நம்பப்படுகிறது.

சந்தேக நபருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.