Reading Time: < 1 minute
Tamil Business Directory
எட்மன்டனில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
கார் ஒன்றும், பாரவூர்தி ஒன்றும் மோதிக்கொண்டதனாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கார் சாரதியின் கவனக்குறைவு காரணமாகவே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




