Reading Time: < 1 minute

பிராம்ப்டனின் குடியிருப்பு பகுதியில் வெள்ளிக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒரு ஆண் இறந்துவிட்டதாக பீல் பிராந்திய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Tamil Business Directory

பதின்வயதில் இருந்த ஆணொருவர் பலமான துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் சம்பவ இடத்தில் இறந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

குற்றம் நடந்த இடத்தை ஒட்டியுள்ள ரிட்ஜ்வியூ பப்ளிக் பள்ளி வெள்ளிக்கிழமை முழுவதும் மூடப்படும் என்று பீல் பிராந்திய மாவட்ட பள்ளி வாரியம் தெரிவித்துள்ளது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பொதுமக்கள் உடனே தங்களை இந்த எண்ணில் (905) 453-2121, ext. 3205 தொடர்புக் கொள்ளுமாறு பொலிசர் தெரிவித்துள்ளனர்.