Reading Time: < 1 minute

பொதுவாக ஒரு நாட்டின் தலைவர் மற்றொரு நாட்டின் தலைவரை சந்திப்பது அல்லது அரசு முறைப் பயணம் மேற்கொள்வது போன்ற செய்திகள் தான் உலகளவில் அதிக கவனம் பெறும். ஆனால், தற்போது கனடாவில் ஒரு மாகாணத்தின் பிரீமியர் பிரான்ஸ் ஜனாதிபதியை சந்தித்திருக்கும் செய்தி முக்கிய தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது.

Tamil Business Directory

கனடாவின் கியூபெக் மாகாணத்தின் பிரீமியரான Christine Fréchette, சமீபத்தில் France சென்றுள்ளார். அங்கு அவர் Emmanuel Macron மற்றும் பிரான்ஸ் பிரதமரை சந்தித்து முக்கிய ஆலோசனைகள் நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி மேக்ரான், “கனேடிய தலைவர் ஒருவர் வந்துள்ளார்” என்று குறிப்பிடாமல், “கியூபெக்குக்கு நல்வரவு” என்று தனி அரசியல் அங்கீகாரத்துடன் வரவேற்றது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும், ஆராய்ச்சி, செயற்கை நுண்ணறிவு (AI), தொழில்நுட்ப வளர்ச்சி உள்ளிட்ட பல துறைகளில் பிரான்சுக்கு கியூபெக் உதவக்கூடிய முக்கிய பங்காளியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கியூபெக்குக்கு கனடாவின் மற்ற மாகாணங்களை விட சில தனித்துவமான அதிகாரங்களும் உரிமைகளும் உள்ளன. குறிப்பாக, அந்த மாகாணத்துக்கு தனித்த சர்வதேச தூதரக வலையமைப்பு உள்ளது. வெளிநாட்டு முதலீடுகள், சுற்றுலா வளர்ச்சி, உள்ளூர் வர்த்தக விரிவாக்கம் போன்ற பல விடயங்களில் கியூபெக் தனித்த முடிவுகளை எடுக்கக்கூடிய அதிகாரம் பெற்றுள்ளது.

அத்துடன், கியூபெக்கில் பெரும்பாலான மக்கள் பிரெஞ்சு மொழி பேசுவதால், அந்த மாகாணம் மற்றும் பிரான்ஸ் இடையே நீண்டகால கலாச்சார மற்றும் தூதரக உறவுகள் இருந்து வருகின்றன.

இதனால், கியூபெக் பிரீமியரின் இந்த பிரான்ஸ் பயணம், ஒரு நாட்டின் தலைவர் மற்றொரு நாட்டிற்கு மேற்கொள்ளும் உயர்மட்ட அரசு முறைப் பயணத்தை ஒத்த அளவில் சர்வதேச கவனத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.