Reading Time: < 1 minute

பிக்கறிங் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த இருவரின் உடல்நிலை தற்போது, தேறி வருவதாக மருத்துவ பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

Tamil Business Directory

பேஃலி வீதிக்கு தெற்கே புரோக் வீதி மற்றும் டிலிங்ஹாம் வீதிப் பகுதியில் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்துடன் தொடர்புடைய வாகனம் ஒன்றின் சாரதி சம்பவ இடத்திலிருந்து கால்நடையாக தப்பிச் சென்றுவிட்ட நிலையில், அவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், இவ் விபத்து குறித்த தீவிர விசாரணைகளை டூர்ஹம் பிராந்திய பொலிஸார், தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.