Reading Time: < 1 minute

கனடாவின் பிக்கரிங் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 17 வயது சிறுவன் கொல்லப்பட்டுள்ளான்.

Tamil Business Directory

ஒன்றாரியோவின் பிக்கரிங் கிங்ஸ்டனில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளான்.

தாக்குதல் சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை.

வாகனத்திலிருந்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவத்தினால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் கிடையாது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.