Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு இலட்சத்தை அண்மிக்கின்றது.

Tamil Business Directory

இதன்படி, அங்கு 99 ஆயிரத்து 853பேர் வைரஸ் தொற்றினால் பாதிப்படைந்துள்ளதாக உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், கொரோனா தொற்றால் கடந்த 24 மணித்தியாலத்தில் 386பேர் பாதிப்படைந்துள்ளதோடு, 41பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 17ஆவது நாடாக விளங்கும் கனடாவில், இதுவரை 8,254பேர் மொத்தமாக உயிரிழந்துள்ளனர்.

மேலும், 29,582பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 62,017பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 1,982பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.