Reading Time: < 1 minute

காசாவில் இருந்து வெளியேற அனுமதி வழங்கப்பட்ட கனடியர்கள் தொடர்ந்தும்காத்திருக்க நேரிட்டுள்ளது.

Tamil Business Directory

கடந்த வெள்ளிக்கிழமை வெளியேறுவதற்காக அனுமதிக்கப்பட்ட 266 கனடியர்களினால் வெளியேற முடியவில்லை.

வெள்ளிக்கிழமை ஒரு தொகுதி கனடியர்கள் காசாவை விட்டு பாதுகாப்பான வழிகளில் வெளியேறுவர் என முன்னதாக அறிவிக்கப்பட்டது.

இதற்கு எழுத்துபூர்வமாக அனுமதி வழங்கப்பட்ட போதிலும் இவர்கள் காசா பிராந்தியத்தை விட்டு வெளியேற சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

காசா பிராந்திய வலயத்தின் காசா எல்லைப் பகுதி மூடப்பட்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் எந்த ஒரு வெளிநாட்டு பிரஜையும் காசாவை விட்டு வெளியேறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவைச் சேர்ந்த 266 பிரஜைகள் இவ்வாறு ரஃபா வழியாக வெளியேற காத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.