Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் வாகனம் ஒன்று நீர் நிலையில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
டொரன்டோவின் அஸ் பிரிட்ஜஸ் விரிகுடா பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வாகனம் ஒன்று நீரில் மூழ்கியமை தொடர்பில் போலீசாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வாகனம் நீரில் மூழ்கிதனால் பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மீ
ட்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் டொரன்டோ போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். ப
ல்வேறு வழிகளில் விசாரணைகள் முன்வைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.




