Reading Time: < 1 minute

கனடாவில் Polyamory அதிகரிப்பு: சட்ட அமைப்பு இன்னும் தயாரில்லை – வல்லுநர்கள் எச்சரிக்கை

Tamil Business Directory

Polyamory என்பது ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட நபர்களுடன், சம்பந்தப்பட்ட அனைவரின் சம்மதத்துடன் காதல் அல்லது பாலியல் உறவை வைத்திருக்கும் முறை ஆகும்.

கனடாவில் பலதுணை உறவுமுறை (Polyamory) கடைப்பிடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக கூறப்படுகின்ற நிலையில், அதற்கான சட்ட அமைப்பு இன்னும் முழுமையாக தயாராக இல்லை என சட்ட வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

கனடாவில் ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களுடன் திருமண உறவில் இருப்பது (Polygamy) சட்டவிரோதமாகும். ஆனால், திருமண ஒப்பந்தம் இன்றி, பரஸ்பர சம்மதத்துடன் பலருடன் உறவில் இருப்பது (Polyamory) சட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள குடும்பச் சட்டங்கள் பெரும்பாலும் இருவர் கொண்ட உறவுகளை (two-person relationships) மட்டுமே மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளதால், பலதுணை உறவுகளில் இருப்பவர்கள் சொத்துரிமை, குழந்தைகள் பராமரிப்பு மற்றும் நிதி பாதுகாப்பு போன்ற விஷயங்களில் சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

British Columbia போன்ற மாகாணங்களில், இரண்டு பேருக்கு மேற்பட்டவர்களை குழந்தையின் பெற்றோர்களாக அங்கீகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. ஆனால் Alberta போன்ற மாகாணங்களில் சட்டங்கள் இன்னும் கடுமையாக இருப்பதாக கூறப்படுகிறது.

சட்டரீதியான பாதுகாப்பு குறைவாக உள்ளதால், பலதுணை உறவில் இருப்பவர்கள் தங்களுக்குள் “cohabitation” அல்லது “co-ownership” ஒப்பந்தங்களை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என சட்டத்தரணிகள் Marcus Sixta மற்றும் Hilary Angrove ஆகியோர் பரிந்துரைத்துள்ளனர்.

ஆனால், இத்தகைய உறவுகள் முறியும் சூழலில், நீதிமன்ற தீர்ப்புகள் இன்னும் தெளிவற்ற நிலையில் உள்ளதாகவும் வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.