Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.

Tamil Business Directory

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, மொத்தமாக 15இலட்சத்து எட்டாயிரத்து 654பேர் குணமடைந்துள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 15இலட்சத்து 81ஆயிரத்து 910பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 27ஆயிரத்து 434பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 3,852பேர் பாதிக்கப்பட்டதோடு 39பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 45ஆயிரத்து 822பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 638பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.