Reading Time: < 1 minute
Tamil Business Directory
கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து மொத்தமாக 16இலட்சத்துக்கும் அதிகமானோர் குணமடைந்துள்ளனர்.
அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கனடாவில் 16இலட்சத்து ஆயிரத்து 860பேர் குணமடைந்துள்ளனர்.
கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால், 2,323பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு 69பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 27ஆவது நாடாக விளங்கும் கனடாவில் இதுவரை மொத்தமாக 16இலட்சத்து 67ஆயிரத்து 575பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28ஆயிரத்து 289பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள 37ஆயிரத்து 426பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 776பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.




