Reading Time: < 1 minute

கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 ஆயிரமாக உயர்வடைந்துள்ளது.

Tamil Business Directory

நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியான நிலவரப்படி, ஒரேநாளில் 207பேர் உயிரிழந்ததோடு, 3,391பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த நிலவரப்படி, கனடாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 55,061பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை, 3,391ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், 28,919பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதோடு, 22,751பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதுதவிர, 557பேரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.