Reading Time: < 1 minute

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் உள்ள பேரி நகரைச் சேர்ந்த அன்னி ஏ. என்ற பெண், Crossword Extreme Scratch லாட்டரி சீட்டின் மூலம் 350,000 டொலர் பரிசை வென்றுள்ளார்.

Tamil Business Directory

தனது பரிசுத் தொகையைப் பெற்றுக்கொள்வதற்காக டொராண்டோவில் உள்ள OLG பரிசு மையத்திற்குச் சென்றபோது, தனது மகிழ்ச்சியை அன்னி பகிர்ந்து கொண்டார்.

பல ஆண்டுகளாக OLG லாட்டரி விளையாடி வருவதாகவும், இது தான் தமக்கு கிடைத்த முதல் பெரிய வெற்றி என்றும் அவர் தெரிவித்துள்ளார். Crossword விளையாட்டு தமக்கு மிகவும் பிடித்தது என்றும், புதிர் ஒன்றை தீர்ப்பது போல நிதானமாக நேரம் எடுத்துக்கொண்டு விளையாட முடிவதால் அதை விரும்புவதாகவும் அவர் கூறினார்.

ஒரு நாள் மதியம், பேரி நகரின் Yonge Street-இல் உள்ள Zehrs கடையிலிருந்து வெளியேறவிருந்தபோது, வழக்கம்போல தனது லாட்டரி சீட்டுகளை அன்னி வாங்கியுள்ளார்.

அன்றைய தினம் மாலையில் வீட்டில் அமர்ந்து சீட்டுகளைச் சுரண்டியபோது, முதலாவது சீட்டில் அவருக்கு 75 டொலர் பரிசு கிடைத்துள்ளது. அதற்கே அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.

ஆனால் அடுத்த சீட்டைச் சுரண்டியபோது, அவரால் தன் கண்களையே நம்ப முடியவில்லை. லாட்டரி செயலியில் சீட்டை ஸ்கேன் செய்தபோது, தமக்கு 350,000 டொலர் பரிசு கிடைத்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த செய்தியைக் கண்டவுடன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்ததாகவும், அருகில் அமர்ந்திருந்த தனது கணவர் கூட இதனை நம்ப முடியாமல் ஆச்சரியமடைந்ததாகவும் அன்னி தெரிவித்துள்ளார்.

“இது இன்னும் எனக்கு ஒரு கனவு போலத்தான் இருக்கிறது,” என அவர் மகிழ்ச்சியுடன் கூறினார்.

திடீரென கிடைத்த இந்த பரிசுத் தொகையை தனது பிள்ளைகளுக்கு உதவவும், எதிர்காலத்திற்காக சேமிக்கவும், ஓய்வூதிய காலத்தைத் திட்டமிடவும் பயன்படுத்த விரும்புவதாக அன்னி தெரிவித்துள்ளார்.

Crossword Extreme Scratch சீட்டின் விலை 30 டொலர் ஆகும். இந்த விளையாட்டின் அதிகபட்ச பரிசு 350,000 டொலர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.