Reading Time: < 1 minute

கனடாவில், காணாமல் போன 14 வயது பாடசாலை மாணவி தொடர்பில் தகவலறித்த பொது மக்கள் உடனடியாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

Tamil Business Directory

குறித்த பாடசாலை மாணவி, கடந்த வியாழக்கிழமை காலை 131 அவென்யூ மற்றும் 91 தெரு உள்ள கில்லர்னி பாடசாலை வளாகத்தில் வைத்து காணாமல் போனதாக தெரிவிக்கப்ட்டுள்ளது. இவர் எட்மன்டன் பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பில், EPS செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுதாவது, குறித்த 14 வயது சிறுமி 5’5 அங்குலம் உயரமும், 145 கிலோ எடையும் கொண்டவர் ஆவார்.

இந்நிலையில், குறித்த சிறுமி தொடர்பில் தகவல் தெரிந்த பொது மக்கள் உடனடியாக 780-423-4567 அல்லது எட்மன்டன் மற்றும் Crime Stoppers at 1-800-222-8477. என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், இந்த இணையதள முகவரியிலும் www.p3tips.com/250.பொது மக்கள் தெரிவிக்கலாம் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.