Reading Time: < 1 minute

கனடாவின் ரொறென்றோபகுதியில் தமிழ்ப்பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான தகவலை ரொறென்றோ பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.

Tamil Business Directory

சமூகவலைதளமான டுவிட்டரில் பொலிஸார் வெளியிட்டுள்ள பதிவில், ஸ்ரீ சக்தி குமாரசாமி (Srisakthi Coomaraswamy) என்ற 53 வயது பெண் கடந்த 15 ஆம் திகதியில் இருந்து காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் 15 ஆம் திகதி மதியம் 12.30 மணிக்கு கடைசியாக Finch Av + Tapscott Rd பகுதியில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீ சக்தி 5 அடி 4 அங்குலம் உயரம் கொண்டவர் எனவும், சாதாரண உடல்வாகுடன் இருப்பார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் போன போது ஸ்ரீசக்தி கருப்பு நிற கோட், கருப்பு நிற பாதணி மற்றும் சிவப்பு நிறத்தில் தொப்பி அணிந்திருந்தார்.

ஸ்ரீசக்தி குறித்து தகவல் தெரிந்தால் பொலிஸார் அணுகலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.