Reading Time: < 1 minute

ஒட்டாவா பகுதியில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒட்டாவாவின் வானியர் பகுதியில் இந்த கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

Tamil Business Directory

கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்கான நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

ஓட்டோவா பொலிஸார் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்தவரின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

இந்த ஆண்டில் ஒட்டோவாவில் இதுவரையில் 23 படுகொலை சம்பவங்கள் இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.