Reading Time: < 1 minute

1990ம் ஆண்டு தமிழீழ தேசியத்தலைவரால் அறிமுகம் செய்துவைக்கப்பட்ட தமிழீழ தேசிய கொடியை கடந்த 3 ஆண்டுகளாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் நவம்பர் 21ஐ தமிழீழ தேசிய கொடிநாளாக கொண்டாடிவருகின்றது.

Tamil Business Directory

இன்று Nov 21, 2023 கனடா பிராம்ப்டன் நகரசபை தமிழீழ தேசிய கொடிநாளை
அங்கீகரித்து நகரசபை கொடிக்கம்பத்தில் தமிழீழ தேசியக்கொடி நகரபிதா பற்றிக் பிரவுன் அவர்களால் ஏற்றிவைக்கப்பட்டது.

இந்நிகழ்வை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களும் பொதுமக்களும் ஏற்ப்பாடு செய்திருந்தனர்.

தமிழை பிரதிநிதித்துவப்படுத்த தமிழீழ தேசிய கொடியே உலகெங்கும் பரந்துவாழும் தமிழர்களால் தமிழ் தேசியக்கொடியாகவும் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஏற்றப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.