Reading Time: < 1 minute

கனடா தமிழ் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமான புங்குடுதீவு 10ம் வட்டாரத்தை சேர்ந்த திரு நாகராஜா தேசிங்குராஜா (சோதி) அவர்கள் இன்று கொரொனா நோய் காரணமாக காலமாகிவிட்டார்.

Tamil Business Directory

கனடா உதயன் பத்திரிகையின் பிரதிகளை பிரம்டன், மிசிசாகா, நோர்த்யோர்க் மற்றும் ஈற்றோபிக்கோ ஆகிய பகுதிகளுக்கு கடந்த பல வருடங்களாக விநியோகம் செய்யும் பணியை திரு சோதி (நாகராஜா தேசிங்குராஜா) அவர்கள் மேற்கொண்டுவந்தார்.

இவரின் துணைவியார் திருமதி சோதி (புஸ்பராணி) ,கொடிய ‘கொரோனா’வின் பிடிக்குள் அகப்பட்டு நேற்று முன்தினம் மரணத்தைத் தழுவியிருந்தார்.

இன்று திரு நாகராஜா தேசிங்குராஜா (சோதி) அவர்கள் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இவர்களின் மூன்று பெண் பிள்ளைகளுக்கும் கொரோனாத் தொற்று ஏற்பட்டு தற்போது குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கனடாவில் கொரோனா மரணம் தொடர்பாக அரசினால் கொண்டுவரப்பட்ட இறுதிக்கிரிகைகள் தொடர்பான நடைமுறையியால், இவர்களின் பிள்ளைகள் கூட இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத பேரவலம் ஏற்பட்டுள்ளது.