Reading Time: 2 minutes

கனடா ஒட்டாவா நகரில் ஏற்பட்ட வாகன விபத்தில் தேசிய செயல்பாட்டாளர் சுரேஸ் பலி.

இன்று மாலை (May 15, 2020, 5:30 PM) கனடா ஒட்டாவா மாநகருக்கு அருகில், ஸ்மித்ஸ் நீர்வீழ்ச்சிக்கு தெற்கே (Smiths Falls) மின் கம்பம் ஒன்றுடன் மோதிய மற்றொரு ஓட்டுநருக்கு உதவ தனது வாகனத்தை நிறுத்திய சுரேஷ் அவர்கள், உதவி செய்துகொண்டிருந்தவேளை 3வது வாகனம் விழுந்திருந்த மின் கம்பியின் மீது ஏறி உயரழுத்த மின்சாரம் தாக்கி 52 வயதான சுரேந்திரன் தம்பிராஜா சம்பவ இடத்தில் இறந்துவிட்டதாக ஒன்ராறியோ மாகாண பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மற்றைய வாகன சாரதி ஒருவர் சிறு காயம் அடைந்துள்ளார். போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒட்டாவா சுரேஷ் என எல்லோராலும் அறியப்பட்ட 5 பிள்ளைகளின் தந்தையான சுரேஷ் அவர்கள் புத்தூரை பிறப்பிடமாகவும், கடந்த 30 வருடங்களுக்கு மேலாக ஒட்டாவாவில் வசித்தும் வருகிறவருமாவார். ஓட்டவா நகரில் உள்ள மக்களின் தொடர்புகளை பேணுதலும் பல அரசியல் வேலை திட்டங்களயும் தமிழ்த் தேசியத்திற்க்காக முன்னெடுத்தவர்.

கணனி துறையில் சிறந்து விளங்கிய இவர் பன்முக ஆளுமையை கொண்டிருந்தார்.

ஒட்டாவா தமிழர் ஒருங்கிணைப்பு குழு (TCC) பொறுப்பாளராகவும், தாயக செயட்பாடுகளில் எண்பது (1980s) காலப்பகுதி முதல் 2009 வரை தனது முழுப்பங்களிப்பினையும் வழங்கியவராவார்.

2004ம் ஆண்டு டொரோண்டோவில் பிரமாண்டமாக குயின்ஸ் பார்க் முன்றலில் நடைபெற்ற பொங்குதமிழ் நிகழ்வை முற்றுமுழுதாக ஒழுங்கமைத்தவர் சுரேஷ் அவர்கள்.

2000 ஆண்டு இறுதியில் கனடிய தமிழ் காங்கிரஸ் (Canadian Tamil Congress), மற்றும் டொரோண்டோவில் இயங்கிவரும் TVI, CMR வானொலி ஆகியவற்றின் ஆரம்ப உருவாக்கத்தில் சுரேஷின் பங்களிப்பு பெரியது.

ஈழ போராட்டத்தின் பதிவுகளை தனது கேமரா ஒவியம் மூலம் வெளிப்படுத்தியவர் சுரேஷ் அவர்கள். புகைப்படக்கலையில் சிறந்து விளங்கிய இவர், 2002 – 2006 சமாதான காலப்பகுதியில் வன்னி சென்று புலிகளின் படையணிகள் முதல், தேசியத்தலைவர் வரை புகைப்பட தொகுப்புகளை உருவாக்கியவராவார்.

ஒட்டாவா, கால்ரன் பல்கலைக்கழகங்களில் கல்விபயின்ற மாணவர்களை தாயகம் நோக்கிய செயல்பாடுகளில் உள்வாங்கி இன்றும் அவர்கள் சிறந்த நாட்டுப்பற்றாளர்களாக இருக்க சுரேஷின் பங்களிப்பு மிகப்பெரும் காரணமாகும்.

கடந்த பலவருடங்களாக ஒட்டாவாவில் கட்டுமான துறையில் ஈடுபட்டு வருகின்றார்.

சுரேஷ் அவர்களுக்கு எமது கண்ணீர் அஞ்சலிகள். அவரின் பணிகளுக்கு எமது சிரம் தாழ்த்திய வணக்கங்கள்.

https://ottawa.ctvnews.ca/mobile/52-year-old-from-nepean-dies-in-fatal-crash-south-of-smiths-falls-1.4942314