டொராண்டோவில் 14 ட்ரோன்களை தடுத்து நிறுத்திய காவல்துறை டொராண்டோ ஃபோர்ட் யோர்க் (Fort York) பகுதியில் உள்ள FIFA Fan Fest மைதானத்திற்கு அருகே ஞாயிற்றுக்கிழமை இரவு அனுமதியின்றி பறந்த மற்றொரு ட்ரோனை டொராண்டோ காவல்துறை தடுத்து நிறுத்தியது.
இந்த மாத தொடக்கத்தில் உலகக் கோப்பை போட்டிகள் ஆரம்பித்ததில் இருந்து, இதுவரை 14 ட்ரோன்கள் இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக சனிக்கிழமை அன்று இதே பகுதியில் ட்ரோன்களை பறக்கவிட்ட இரண்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
உலகக் கோப்பை போட்டிகள் நடக்கும் டொராண்டோ ஸ்டேடியம், FIFA Fan Fest மற்றும் பயிற்சி மைதானம் அமைந்துள்ள சென்டெனியல் பார்க் (Centennial Park) ஆகிய பகுதிகள் அனைத்தும் போட்டிகள் முடியும் வரை ‘ட்ரோன்கள் பறக்க தடைசெய்யப்பட்ட மண்டலங்களாக’ (No Fly Zones) அறிவிக்கப்பட்டுள்ளன.
சட்டவிரோதமான ட்ரோன் இயக்கங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக காவல்துறை எச்சரித்துள்ளது.
சிறுவர்கள் இந்த விதிகளை மீறினாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படலாம் என்பதால், பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் ட்ரோன் பயன்பாட்டைக் கண்காணிக்குமாறு காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது.





Comments are closed, but trackbacks and pingbacks are open.