Reading Time: < 1 minute

கனடா டொராண்டோவின் எட்டோபிகோக் (Etobicoke) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நிகழ்ந்த கத்திகுத்து சம்பவத்தில், 30 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

Tamil Business Directory

கிப்ளிங் அவென்யூ மற்றும் ஆல்பியன் சாலை சந்திப்புப் பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளதாக டொராண்டோ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், உடலில் பலத்த கத்திகுத்து காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த நபரைக் மீட்டனர். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோதிலும், சிகிச்சை பலனின்றி சிறிது நேரத்திலேயே உயிரிழந்தார். உயிரிழந்தவர் மற்றும் சந்தேக நபர் இருவருமே 30 வயது மதிக்கத்தக்கவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் சம்பவ இடத்திற்கு அருகிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட நபரும், சந்தேக நபரும் ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள், அநேகமாக அவர்கள் நண்பர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது.

இதனால் பொதுமக்களின் பாதுகாப்பிற்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், முதற்கட்ட விசாரணையின்படி, அடுக்குமாடி குடியிருப்பின் உள்ளே ஏற்பட்ட ஒரு “தகராறு” காரணமாகவே இந்த கொடூர சம்பவம் நிகழ்ந்திருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.