Reading Time: < 1 minute கனடாவின் பொதுப் போக்குவரத்து சேவையான ரீ.ரீ.சீயில் டிக்கட் இன்றி பயணிப்போருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிக்கட் இன்றி பயணம் செய்வோருக்கு 425 டொலர்கள் வரையில் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டிக்கட் இன்றி பயணம் செய்பவர்களினால் வருடாந்தம் பல மில்லியன் டொலர் நட்டம் ஏற்படுவதாக ரீ.ரீ.சீ.யின் பேச்சாளர் ஸ்டுவர்ட் கிறீன் (Stuart Green) தெரிவித்துள்ளார். கட்டணம் செலுத்த தவறும் பயணிகளினால் ஆண்டு ஒன்றுக்கு சுமார் 70 மில்லியன் டொலர்கள் வருமான இழப்புRead More →

Reading Time: < 1 minute கனடாவில் இருந்து ஐரோப்பாவிற்கு நேரடியாக திரவ இயற்கை எரிவாயுவை ஏற்றுமதி செய்வதற்கான வழிகளை ஆராய்ந்து வருவதாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்தார். ஜேர்மனி ஆட்சித் தலைவர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் கனடாவிற்கு விஜயம் செய்துள்ளார். அவரை நேற்று கியூபெக் – மொன்றியலில் ட்ரூடோ சந்தித்துப் பேசினார். தொடர்ந்து இடம்பெற்ற கூட்டுச் செய்தியாளர் சந்திப்பின்போதே ட்ரூடோ இவ்வாறு தெரிவித்தார். குறுகிய காலத்தில் திறன்களை அதிகரிப்பதன் மூலம் உலகளாவிய வலுசக்தி விநியோகத்திற்கு பங்களிக்க எங்களால்Read More →

Reading Time: < 1 minute ஒன்ராறியோவில் 9 ஆண்டுகளுக்கு முன்னர் வாங்கிய தங்கம் மற்றும் வெள்ளியை தொடர்புடைய வங்கியே வாங்க மறுத்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. ஒன்ராறியோவை சேர்ந்த லிண்டா கேட்ஹவுஸ் என்பவர் கடந்த 2013ல் ஸ்கோடியவங்கியில் இருந்து வாங்கிய தங்கம் மற்றும் வெள்ளியையே தற்போது குறித்த வங்கி திரும்ப வாங்க மறுத்துள்ளது. வங்கியின் செயலால் அதிர்ச்சியில் இருந்து மீளாத குறித்த பெண்மணியிடம் தற்போது விலைமதிப்பற்ற உலோக வணிகத்தில் வங்கி ஈடுபடவில்லை எனவும், அடகு வியாபாரம்Read More →

Reading Time: < 1 minute ஸ்காப்ரோவில் கடந்த வாரம் கடத்தப்பட்ட பெண்ணை தேடிக் கண்டு பிடிப்பதற்கு பொதுமக்களின் உதவி நாடப்பட்டுள்ளது. றொரன்டோ பொலிஸார் குறித்த பெண் கடத்தப்பட்டுள்ளதாக சந்தேகம் வெளியிட்டுள்ளனர். கடத்தப்பட்டதாக கூறப்படும் பெண்ணின் புகைப்படம் ஒன்றை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். கில்ட்வுட் பார்க்வே மற்றும் கிங்ஸ்டன் வீதிக்கு அருகாமையில் நடந்து சென்றிருந்த வேளையில் நபர் ஒருவர் வாகனத்தில் குறித்த பெண்ணை வாகனத்தில் கடத்திச் சென்றுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண்ணை வழி மறித்து கடத்திச் சென்றுள்ளதாகRead More →

Reading Time: < 1 minute இந்த சம்பவம் கட்டடமொன்றின் வரவேற்பறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. க்ளென் எவரஸ்ட் மற்றும் கிங்ஸ்டன் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கத்திக் குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் இருந்த நபரை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த நபரை பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும், குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த கத்தி குத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பற்றிய விபரங்கள் எதுவும்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் இடம்பெற்று வரும் மோசடி சம்பவமொன்று குறித்து பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சில நபர்கள் தீயனைப்புப் படையினர் என்ற போர்வயில் இவ்வாறு மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். போலியான பாதுகாப்பு கருவிகள் (safety kits) விற்பனை செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளனர். கனடாவின் ஹால்டன் பகுதியில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஹால்டனின் பர்லிங்டன் தீயனைப்புப் பிரிவினர் பாதுகாப்பு கருவிகளை விற்பனை செய்யவில்லை எனவும் மோசடி கும்பல் ஒன்று போலியாக விற்பனைRead More →

Reading Time: < 1 minute நாட்டில் கடந்த ஆண்டு ஜுலை மாதத்துடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் பணவீக்கம் குறைவடைந்துள்ளது. கடந்த மாதம் நாட்டின் பணவீக்க வீதம் 7.6 வீதமாக காணப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் நாற்பது ஆண்டுகளில் பதிவான அதி கூடிய பணவீக்க வீதமாக 8.1 வீத பணவீக்கம் பதிவாகியிருந்தது. கடந்த 2020ம் ஆண்டு ஜூன் மாதத்தின் பின்னர் முதல் தடவையாக ஓராண்டுக்கு முன்னர் இந்த பண வீக்கத்தை விடவும் குறைந்தளவு பணவீக்கம்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கடந்த 2021ல் மருத்துவ உதவியுடன் கருணைக் கொலைக்கு உட்பட்டவர்கள் எண்ணிக்கை பத்தாயிரம் தாண்டியுள்ளதாக பெடரல் ஆண்டு அறிக்கையில் தெரிய வந்துள்ளது. 2020ல் இருந்து குறித்த எண்ணிக்கையானது 32% அதிகரித்துள்ளதாகவும் பெடரல் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கனடாவில் 2021ல் பதிவான இறப்பில் 3.3 சதவீதம் (10.064) மருத்துவ ரீதியான கருணைக் கொலை என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பிராந்திய ரீதியாக கியூபெக்கில் 4.7% எனவும் பிரிட்டிஷ் கொலம்பியாவில் 4.8% எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.Read More →

Reading Time: < 1 minute கனடாவில் வீட்டு வாடகை தொகை தொடர்ந்தும் உயர்வடைந்து செல்வதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த ஜூலை மாதத்தில் அநேகமான மாகாணங்களில் வாடகை தொகை சராசரியாக அதிகரித்துள்ளது. கடந்த மாதம் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் மிக அதிக அளவில் வாடகை தொகை அதிகரித்திருந்தது எனவும் அதற்கு அடுத்தபடியாக ஒன்றாரியோ மாகாணத்தில் வாடகை தொகை அதிகரித்திருந்தது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோ மாகாணத்தில் சராசரி மாத வாடகை தொகையானது 2332 டாலர்களாக காணப்பட்டது, இது அதற்கு முந்தையRead More →

Reading Time: < 1 minute பெண் ஒருவரைத் தாக்கி, குழந்தையை தடுத்து வைத்திருந்த நபர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். ஸ்காப்ரோவின் மிட்லான்ட் அவன்யூ மற்றும் கிங்ஸ்டன் வீதிகளுக்கு அருகாமையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. றொரன்டோ பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடாத்தியமை குறித்து விசேட விசாரணைப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். பெண் ஒருவர் தாக்கப்பட்டதாக பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்திருந்தனர். 42 வயதான நபர் ஒருவர் பெண்ணைRead More →

Reading Time: < 1 minute கனடாவில் குரங்கம்மையால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது. இது குறித்து கனடா பொது சுகாதார கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஒன்டாரியோவில் இருந்து 511 பேர், கியூபெக்கில் இருந்து 426 பேர், பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருந்து 98 பேர், ஆல்பெர்ட்டாவில் இருந்து 19 பேர், சாஸ்கத்சிவானில் இருந்து 3 பேர் மற்றும் யுகோன் பகுதியில் இருந்து 2 பேர் என மொத்தம் 1,059 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளதாக்Read More →

Reading Time: < 1 minute றொரன்டோவில் மரண சடங்கு ஒன்றில் பங்கேற்றவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். றொரன்டோவின் ரிச்மன்ட்ஹில் மயானத்தில் இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. ரிச்மன்ட்ன் ஹில் பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம் மையவாடியில் இந்த தாக்குதல் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 26 மற்றும் 27 வயதான இரண்டு பேர் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டRead More →

Reading Time: < 1 minute அமெரிக்காவிலிருந்து, கனடாவிற்குள் ஆயுதங்கள் மற்றும் போதை பொருட்கள் என்பனவற்றை கடத்திய கும்பலை ஒன்றாரியோ போலீசார் கைது செய்துள்ளனர். கொக்கேய்ன், கண்டேனேல் ஆகிய போதை பொருட்களையும் துப்பாக்கிகளையும் கனடாவிற்குள் கடத்திய கும்பல் ஒன்றையே இவ்வாறு யோர்க் பிராந்திய போலீசார் கைது செய்துள்ளனர். மொத்தமாக 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கு எதிராக 400 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவிக்கின்றனர். அமெரிக்காவிலிருந்து சட்டவிரோதமான முறையில் கனடாவிற்குள் ஆயுதங்கள் கடத்தும் கும்பல் தொடர்பில் விரிவானRead More →

Reading Time: < 1 minute கனடாவில் குரங்கம்மை பாதிப்பு எண்ணிக்கை ஆகஸ்டு 10ம் திகதிவரையான தரவுகளின் அடிப்படையில் ஆயிரம் கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆகஸ்டு 10ம் திகதி வரையில் கனடாவில் குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்கள் என்ணிக்கை 1008 என தெரிய வந்துள்ளது. ஒன்ராறியோவில் மட்டும் 478 பேர்களுக்கு குரங்கம்மை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கியூபெக்கில் 425 பேர்களுக்கும், பிரிட்டிஷ் கொலம்பியாவில் 85 பேர்களுக்கும், ஆல்பர்ட்டாவில் 16 பேர்களுக்கும், சஸ்காட்செவன் மற்றும் யூகோன் பகுதிகளில் தலா இருவருக்கும்Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் நேற்று (09-08-2022) அதிகாலை வேளையில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். ரொறன்ரோவின் லோரன்ஸ் அவன்யூ மற்றும் வெஸ்டன் வீதியில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தகவல் அறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது துப்பாக்கிச் சூட்டு காயங்களுக்கு இலக்காகிய இருவரை கண்டதாக தெரிவித்துள்ளனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில்Read More →

Reading Time: < 1 minute பிரிட்டிஷ் கொலம்பியா: கனடாவில் மிக மோசமான குற்றங்களில் ஈடுபட்ட 11 முக்கிய குற்றவாளிகளின் பட்டியலை கனடா காவல்துறை வெளியிட்டுள்ளது. அதில் 9 பேர் இந்திய வம்சாவளியினர். இந்த 11 பேரையும் அடையாளம் கண்டுகொண்டு, அவர்களிடமிருந்து விலகி இருக்குமாறு கனடா காவல்துறை, அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தியிருக்கிறது. பிரிட்டிஷ் கொலம்பியாவி சிறப்பு ஆயுதப் படை, வான்கோவர் காவல்துறை மற்றும் பிசி ராயல் கனடியன் மௌண்டட் காவல்துறையுடன் இணைந்து பொதுமக்களுக்கான இந்த எச்சரிக்கையை அளித்துள்ளது.Read More →