பிரஸ்டோ அட்டை பயனாளர்களுக்கு தொலைபேசி செயலி பயன்பாட்டை அடுத்த ஆண்டு முதல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த பயன்பாடானது 2018ஆம் ஆண்டு வெளிவரும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் அடுத்த வருடம் வெளியிட இருப்பதாக மெட்ரோலின் செய்தித் தொடர்பாளர் ஆன் மேரி எக்கின்ஸ் தெரிவித்துள்ளார். அத்தோடு இதனை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடுவதற்கு முன்பாக கூடுதல் கருத்துக்களை சேகரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாகவும் கூறினார். அந்தவகையில் குறித்த செயலியை டிசம்பர் 13Read More →

யோர்க் பல்கலைக்கழகத்திற்கு அருகே கடந்த மாதம் இடம்பெற்ற பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டவர் மீது 13 குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்கள் குறித்து கடந்த வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட 20 வயதுடைய நபர் மீதே குறித்த குற்றச்சாட்டுக்களை பொலிஸார் முன்வைத்துள்ளனர். கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி ஃபவுண்டைன்ஹெட் பார்க், ஃபின்ச் அவென்யூ மேற்கு மற்றும் செண்டினல் சாலைRead More →

சீனாவில் இரு கனேடியர்கள் கைதுசெய்யப்பட்ட விடயம் கனடாவில் மாத்திரமன்றி உலகளாவிய ரீதியில் எதிர்வலைகளை தோற்றுவித்துள்ளதென பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். மாலிக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ட்ரூடோ அங்கு செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார். இரு நாடுகளின் நன்மை கருதி குறித்த இரு கனேடியர்களையும் விடுவிப்பது, மிகவும் அவசியமானதென்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். கனடாவின் பிரபல தொழிலதிபரும் வர்த்தக ஆலோசகருமான Michael Spavor மற்றும் கனேடிய முன்னாள் ராஜதந்திரியான Michael Kovrig ஆகியRead More →

ரொறன்ரோவில் நேற்று முன்தினம் இரவுநேரப் பொழுதில் மாத்திரம் நான்கு பேர் சுடப்பட்டதுடன், மேலும் மூன்று பேர் கத்தியால் குத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் வெள்ளி இரவிலிருந்து சனிக்கிழமை அதிகாலை வரையிலான நேரத்தில் இந்த தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. ஃபின்ச் அவென்யூவிற்கு வடக்கே, றவுண்ட்ரீ வீதி மற்றும் கிப்ளிங் அவென்யூ பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு ஒன்பது மணியளவில் முதலாவது சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த இடத்தில் துப்பர்ககிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அதில் ஒருவர்Read More →

யோர்க் பல்கலைக்கழகத்திற்கு அருகே கடந்த மாதம் இடம்பெற்ற பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் 19 ஆம் திகதி ஃபவுண்டைன்ஹெட் பார்க், ஃபின்ச் அவென்யூ மேற்கு மற்றும் செண்டினல் சாலை வழியாக இரவு 9:30 மணியளவில் நடந்து சென்றுள்ளார். இதன் போது குறித்த பெண்ணை இருவர் கத்தி முனையில் அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.Read More →

சீனாவில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கனேடியர்கள் அனைவரையும் உடனடியாக விடுவிக்குமாறு கனடா கேட்டுக்கொண்டுள்ளது. இரண்டு கனேடியர்கள் சீனாவில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில்,கனேடிய வெளியுறவு அமைச்சர் கிறிஸ்டியா ஃபிறீலான்ட் சீன அரசாங்கத்திடம் உத்தியோகபூர்வமாக இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் சீன அரசாங்கத்திற்கு அனுப்பி வைத்துள்ள எழுத்து மூலமான கோரிக்கையில், இந்த மாதத்தின் தொடக்கதில் கனேடியர்கள் இருவரை சீன அதிகாரிகள் தன்னிச்சையாக கைது செய்து தடுத்து வைத்துள்ளRead More →

கனடாவில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டதன் பின்னர், 43 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான கஞ்சா விற்பனை செய்யப்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் கூறுகின்றன. கனடா புள்ளிவிபரங்கள் திணைக்களம், கடந்த ஒக்டோபர் 17ஆம் திகதியிலிருந்து, கடைகள் மற்றும் ஒன்லைன் நிலையங்களில் விற்பனை செய்யப்பட்ட கஞ்சாவின், தரவுகளை சேகரித்தது. இதனடிப்படையிலேயே தற்போது இந்த தகவலை கனடா புள்ளிவிபரங்கள் திணைக்களம், வெளியிட்டுள்ளது. வாடிய மொட்டு அல்லது வாடாத மொட்டு, எண்ணெய், தாவரங்கள் மற்றும் விதைகள் என்பன கனடாவில் தற்போதுRead More →

கனடாவில் கடந்த ஒக்டோபர் மாதத்தில் இருந்து ரயில் மூலமான கச்சா எண்ணெய் ஏற்றுமதி, 327,229 பீப்பாய்களாக உயர்ந்துள்ளதாக தேசிய எரிசக்தி சபை தெரிவித்துள்ளது. இது கடந்த செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், 269,829 லிருந்து 21 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ரயில்வே ஏற்றுமதியில் 300,000 பீப்பாய்கள் ஏற்றுமதி செய்யப்படுவது இதுவே முதல் தடைவ என கூறப்படுகின்றது. எதிர்வரும் காலங்களில் ஏற்றுமதிகள் கூடுவதற்கான அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் தேசிய எரிசக்தி சபைRead More →

உயிர்காப்பு உபகரணங்களுடன் எந்நேரமும் வாழவேண்டிய கட்டாயத்தில் இருந்த கனடாவைச் சேர்ந்த சிறுமியொருவருக்கு அவரது பிறந்த தினத்தன்று அபூர்வ பரிசாக இதய மாற்று அறுவைச் சிகிச்சைக்காக இதயம் ஒன்று நன்கொடையாக கிடைத்துள்ளது. எங்கு பயணித்தாலும் உயிர்வாயு (ஒக்ஸிஜன்) கொள்கலனுடன் செல்லவேண்டிய கட்டாயத்தில் அந்த சிறுமி வாழ்ந்து வந்தார். இந்தநிலையில் அவருக்கு நன்கொடையாக மாற்று இதயம் ஒன்று கிடைத்துள்ளமை குறித்து அவளது குடும்பத்தினர் மகிழ்ச்சியில் திளைத்துள்ளனர். கனடாவின் வின்சர் பகுதியில் வசிக்கும் மெக்கைலாRead More →

பணிப் புறக்கணிப்பு போராட்டங்களை முன்னெடுத்து வந்த கனடா தபால் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. கடந்த மாதத்தின் நடுப்பகுதியல் இருந்து சுழற்சி முறையிலான பணிப் புறக்கணிப்பு போராட்டங்களை கனடா தபால் சேவை பணியாளர்கள் முன்னெடுத்துவந்த நிலையில், அதன் சேவைகள் தடைப்பட்டுப் போனமை குறிப்பிடத்தக்கது. எனினும் மத்திய அரசு கொண்டுவந்த சட்டத்தின் மூலம் அவர்கள் அனைவரும் பணிகளுக்கு திரும்ப நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளர். இந்த நிலையில் கடந்த மாதம் 13ஆம் நாளில் இருந்து சேவைத் தடங்கல்கள்Read More →