Reading Time: < 1 minute கனடாவின் றொரன்டோவில் ஸ்கேட்டிங் விளையாட்டில் ஈடுபட்டிருந்த மூவர் பனிப்பாறை உடைந்து நீரில் தவறி வீழ்ந்துள்ளனர். ஹான்லான்ஸ் தீவுகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள பிளக்அவுஸ்பே பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பனிப்பாறையில் ஸ்கேட்டிங் விளையாட்டில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் இவ்வாறு பனிப்பாறை உடைந்து, அந்த பனிப்பாறையுடன் தவறி பனி நீரில் வீழ்ந்துள்ளனர். இவ்வாறு கடுமையான குளிரான நீரில் வீழ்ந்தவர்கள் சுமார் பதினைந்து நிமிடங்களில் சிறிய பனிப்பாறையின் மேலு; தத்தளித்துள்ளனர். உயிர் காப்பு படையினர்,Read More →

Reading Time: < 1 minute திரைப்படங்களில் கொள்ளையர்கள் நிலக்கீழ் சுரங்கம் தோண்டி கொள்ளையிடுவதனை நாம் பார்த்திருக்கின்றோம், அதே பாணியில் கனடாவில் பிரபல ஹோட்டல் ஒன்றில் சுவரில் பாரிய துளையிட்டு திருடப்பட்டுள்ளது. ஒட்டாவா நகரின் டவுன்கேட் சொப்பிங் பிளாஸாவில் அமைந்துள்ள Moe’s BBQ என்ற பிரபல ஹோட்டலில் இவ்வாறு துளையிட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது. இந்த ஹோட்டலுக்கு அடுத்தபடியாக காணப்படும் தங்க நகையகம் ஒன்றில் கொள்ளையிடும் நோக்கில் இவ்வாறு துளையிடப்பட்டுள்ளது. பாரியளவில் சுவரில் துளையிடப்பட்டதனால் குழாய்கள் உடைந்து நீர் வெளியேறிக்Read More →

Reading Time: < 1 minute கடனாவில் அடைக்கலம் கோரும் ஏதிலிகளுக்கு இலவச பஸ் டிக்கட்டுகளை அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் வழங்குவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கியூபெக் மாகாண குடிவரவு அமைச்சர் கிறிஸ்டின் பெரிச்டி இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். நியூயோர்க் நகரிற்கு வரும் ஏதிலிகளை இலவச பஸ் டிக்கட் வழங்கி வேறும் இடங்களில் ஏதிலி கோரிக்கை பெற்றுச் செல்ல உதவுவதாக நகர மேயர் எரிக் எடம்ஸ் தெரிவித்துள்ளார். கனேடிய எல்லைப் பகுதி வரையில் பயணம் செய்வதற்கு இவ்வாறு இலவசRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ரொறன்ரோ நகரில் வீடற்றவர்களுக்கு பெரும் ஆபத்து நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த இரண்டு ஆண்டுகளாக வீடற்ற பலர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2022ம் ஆண்டில் 110 வீடற்றவர்கள் உயிரிழந்துள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 81 பேர் ஆண்கள் எனவும் 29 பேர் பெண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. ரொறன்ரோ தங்குமிடத்தில் தங்கியிருந்தவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். இவ்வாறு உயிரிழந்தவர்களின் சராசரி வயது 51 எனத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த 2023ம் ஆண்டில் 132Read More →

Reading Time: < 1 minute கனடாவில் கடமான் (Moose) வேட்டையில் ஈடுபட்ட நான்கு அமெரிக்கப் பிரஜைகள் மற்றும் இரண்டு கனேடிய பிரஜைகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோவின் வடகிழக்கு பகுதியின் ரெட் லேக் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அமெரிக்காவின் மீன்கள் மற்றும் வனவிலங்கு சேவை மற்றும் ஒன்றாரியோவின் வன மற்றும் இயற்கை வள அமைச்சு என்பன கடந்த 21 மாதங்களாக இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடாத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. படகிலிருந்து இந்த கடமான் மீது துப்பாக்கிச்Read More →

Reading Time: < 1 minute கனடாவில் வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதுண்டதில் நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். கனடாவின் ஹால்டன் பிராந்தியத்தின் மில்டனில் இந்த விபத்துச் சம்பவம் பதிவாகியுள்ளது. வாகனம் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரத்தில் மோதுண்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். டெரி மற்றம் வோல்கர்ஸ் வீதிக்கு அருகாமையில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. விபத்து இடம்பெற்ற வேளையில் வாகனத்தில் சாரதி மட்டும் பயணித்துள்ளதாகவும், சம்பவ இடத்திலேயே சாரதி உயிரிழந்து விட்டதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.Read More →

Reading Time: < 1 minute அரசு ஊழியர்கள் பதவியேற்கும்போது, மன்னர் சார்லஸ் பெயரால் உறுதிமொழி எடுக்கும் நடைமுறையை ரத்து செய்ய ஒன்ராறியோவிலுள்ள பிரெஸ்காட் நகர கவுன்சில் திட்டமிட்டுவருகிறது. அரசு ஊழியர்கள் பதவியேற்கும்போது, மன்னர் சார்லஸ் பெயரால் உறுதிமொழி எடுக்கும் நடைமுறையை ரத்து செய்யும் தீர்மானத்தை பிரெஸ்காட் நகர கவுன்சிலர் Lee McConnell முன்மொழிந்துள்ளார். அதை இன்னொருவர் வழிமொழியும் பட்சத்தில், அது இம்மாதம், அதாவது பிப்ரவரி 27ஆம் திகதி கவுன்சிலின் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும். அந்த தீர்மானம் நிறைவேற்றப்படுமானால்,Read More →

Reading Time: < 1 minute கனடாவின் டர்ஹம் பொவ்மான்வில் பகுதியில் மர்மான முறையில் உயிரிழந்த இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பொவ்மென்வெலி அவன்யூவின் கோர்ம்பின் வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இந்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். சம்பவ இடத்தில் இரண்டு சடலங்களை பொலிஸார் மீட்டுள்ளனர். இந்த இரு சடலங்கள் தொடர்பிலான பிரேதப் பரிசோதனை நடாத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இந்தRead More →

Reading Time: < 1 minute கனடாவின் சில பகுதிகளில நாய்களினால் தொல்லை ஏற்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஒன்றாரியோவின் கிராமிய பகுதிகளில் இவ்வாறு தெரு நாய்களின் தொல்லை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. க்ரீ பெஸ்ட் நேசன், ஜேம்ஸ் பே, சவுத்தர்லேன்ட் உள்ளிட்ட பல பகுதிகளில் நாய்களினால் அதிகளவு தொல்லை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஹுஸ்கிஸ், லெப்ராடோஸ், ஜெர்மன் செப்பர்ட் உள்ளிட்ட சில வகை நாய்கள் இவ்வாறு அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக கிராமிய பகுதிகளில் நாய்களின் தொல்லை வெகுவாக அதிகரித்துள்ளது. நாய்களின்Read More →

Reading Time: < 1 minute சீனாவில் இருந்து வெளியேறும் உய்குர் மக்களை கனடாவில் மீள்குடியேற்றும் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் முடிவு சீனாவின் எதிர்ப்பை சம்பாதிக்கும் என எச்சரித்துள்ளனர். சீனாவில் இருந்து வெளியேறும் 10,000 உய்குர் மக்களுக்கு கனடாவில் குடியேறும் வாய்ப்புகள் அளிக்க ட்ரூடோ நிர்வாகம் ஒருமனதாக பிரேரணை நிறைவேற்றியுள்ளது. முக்கியமாக சின்ஜியாங் மாகாணத்தில் சீன நிர்வாகத்தின் அடக்குமுறையிலிருந்து தப்பி ஓடுகிற மக்களுக்கு இந்த வாய்ப்பளிக்க கனடா முடிவு செய்துள்ளது, சீனாவை கோபத்தில் தள்ளலாம் என கூறுகின்றனர்.Read More →

Reading Time: < 1 minute கனடாவிற்கான ரஸ்ய தூதரகம் தமக்கு தூதரக சேவையை வழங்க மறுக்கப்பட்டதாக ரஸ்ய பெண் ஒருவர் குற்றம் சுமத்தியுள்ளார். எலினா புஸ்கெரிவா என்ற பெண்ணே இவ்வாறு தூதரகம் மீது குற்றம் சுமத்தியுள்ளார். குறித்த பெண்ணின் முகநூல் பயன்பாடு பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக கூறி, சேவை வழங்குவது நிராகரிக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார். சில தசாப்தங்களுக்கு முன்னதாக ரஸ்யாவிலிருந்து வெளியேறிய குறித்த பெண், இந்த சம்பவம் தமக்கு பெரும் அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். தனதுRead More →

Reading Time: < 1 minute கனடாவின் ஸ்காப்ரோவில் ரயில் பாதையொன்றில் சிக்கிய கார் ஒன்றில் பயணம் செய்த நான்கு பேரை மீட்ட ரீ.ரீ.சீ பணியாளர் ஒருவருக்கு பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர். ரயில் காரில் மோதுவதற்கு முன்னதாக, விரைந்து செயற்பட்டு காரில் சிக்கியிருந்த நான்கு பேரையும் பாதுகாப்பாக குறித்த பணியாளர் மீட்டுள்ளார். ஸ்காப்ரோவின் பின்ச் அவன்யூ மற்றும் கென்னடி வீதி என்பனவற்றுக்கு அருகாமையில் இருந்த ரயில் கடவையில் பயணித்த போது திடீரென வாகனம் இயங்கவில்லை எனRead More →

Reading Time: < 1 minute கனேடிய இளம்பெண் ஒருவர் முதன்முறை வாங்கிய லொட்டரிச் சீட்டிலேயே அவருக்கு 48 மில்லியன் டொலர்கள் பரிசு கிடைத்துள்ளது. ஒன்ராறியோவில் வாழும் ஜூலியட்டை (Juliette Lamour, 18) லொட்டரிச்சீட்டு ஒன்றை வாங்கும்படி ஆலோசனை கூறியுள்ளார் அவரது தந்தை. அதன்படி ஜூலியட் வாங்கிய முதல் லொட்டரிச் சீட்டிலேயே அவருக்கு 48 மில்லியன் டொலர்கள் பரிசு கிடைத்துள்ளது. இளம் வயதில் லொட்டரியில் பரிசு வென்ற எத்தனையோ பேர் பணத்தால் சீரழிந்ததைக் குறித்த செய்திகளைக் கேட்டிருக்கிறோம்.Read More →

Reading Time: < 1 minute ரொறன்ரோவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஜனவரியில் குடியிருப்புகளின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 44.6% அளவுக்கு வீட்டு விலை சரிவடைந்துள்ளது. ஜனவரி மாதத்தில் மொத்தம் விற்பனையான குடியிருப்புகளின் எண்ணிக்கை 3,100 என தெரியவந்துள்ளது. ஆனால் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்த எண்ணிக்கையானது 5,594 என இருந்தது. சராசரி விற்பனை விலை 16.4 சதவீதம் குறைந்து $1.04 மில்லியனாக இருந்தது.Read More →

Reading Time: < 1 minute அமெரிக்க வான்வெளியில்ல் பறந்த சீன இராட்சத பலூன் விவகாரம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கனடா விமானிகளுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனடாவின் மரமற்ற பரந்த புல்வெளி பிரதேசங்களான ஒன்ராறியோ மற்றும் கியூபெக் பகுதிகளின் மீது பறக்கும் விமானிகள் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும், அமெரிக்க வான்வெளியில் காணப்பட்ட பலூன்கள் போன்று சந்தேகத்திற்குரிய நடமாட்டம் கண்காணிக்கப்பட்டு தகவல் தெரிவிக்கவும் கோரியுள்ளனர். தொடர்புடைய கண்காணிப்பு பலூன் கனடா வான்வெளியிலும் காணப்பட்டுள்ளது எனவும்,Read More →